முகப்பு /புதுச்சேரி /

கூட்டுறவு மேலாண்மை நிலையங்களை கணினி மையமாக்குவதற்காக சிறப்பு பயிற்சி முகாம்!

கூட்டுறவு மேலாண்மை நிலையங்களை கணினி மையமாக்குவதற்காக சிறப்பு பயிற்சி முகாம்!

X
பயிற்சி

பயிற்சி முகாம்

Puducherry news | புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாஹே பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்குவதற்காக ஒரு நாள் பயிற்சி முகாம் தொடங்கியது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம், இந்திய தேசிய வேளாண்மை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு வங்கியின் மூலம் இந்தியாவில் உள்ள சுமார் தொன்னூராயிரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக புதுச்சேரி அரசின் கூட்டுறவுத் துறையின் மூலம் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாஹே பகுதிகளில் இயங்கி வரும் சுமார் 45 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை கண்டறிந்து அந்த சங்கங்களை கணினி மயமாக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டு இன்று 22 சங்கங்களுக்கும் நாளை 23 சங்கங்களுக்கும் பயிற்சியளிக்கும் முகாம் இன்று புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தொடங்கியது.

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி பயிலரங்கை தொடங்கி வைத்தார். புதுவை மாநிலக் கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாகி சாரங்கபாணி, மேலாண் இயக்குநர் ராமச்சந்திரய்யா ஆகியோர் சிறப்புரையாற்றனார்கள்.

புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் முதுநிலை கணினி விரிவுரையாளர் ரங்கநாதன் மற்றும் கணினி விரிவுரையாளர் ரமேஷ்குமார் ஆகிய இருவரும் "Master Trainer"-களாக இந்திய தேசிய வேளாண்மை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு வங்கியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியளித்தனர்.

இந்த பயிற்சியில் சங்கங்களுக்கு கணினி மயமாக்குதலின் முக்கியத்துவம், மாற்றம் மேலாண்மை, கணினி பயன்பாடுகள், மென்பொருள் நிறுவுதல் மற்றும் சங்கத்தைப் பற்றிய முதல் அறிக்கை தயார் செய்வது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான கூட்டுறவு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை புதுவை மாநிலக் கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாளர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry