முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் உள்ள 16 அடி நரசிம்மருக்கு மண்டலாபிஷேகம்.. பக்தர்கள் பரவசம்!

புதுவையில் உள்ள 16 அடி நரசிம்மருக்கு மண்டலாபிஷேகம்.. பக்தர்கள் பரவசம்!

X
நரசிம்மர்

நரசிம்மர் ஆலயம்

Puducherry News | உலகிலேயே மிக உயரமான வரலாற்று சிறப்புமிக்க 72-அடி உயரம் கொண்ட ஸ்ரீமஹா விஸ்வரூப பாதாள ஸ்ரீபிரத்யங்கிரா காளி ஆஸ்ரமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள16-அடி உயர  ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு மண்டல அபிஷேகம் நிறைவு விழா நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

ஆரோவில் அருகே மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான வரலாற்று சிறப்புமிக்க 72 அடி உயரம் கொண்ட ஸ்ரீமஹா விஸ்வரூப பாதாள ஸ்ரீபிரத்யங்கிரா காளி ஆஸ்ரமத்தில் புதியதாக 16-அடி உயர சிலை ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலின் நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் கடந்த 22 அன்று நடைபெற்றது.தொடர்ந்து லட்சுமி நரசிம்மருக்கு கடந்த 48 நாட்களாக பால், தயிர், நெய், வெண்ணெய், இளநீர், உள்ளிட்ட ஒன்பது திரவியங்களாலும் நவ தானியங்கள் மற்றும் பழங்களாலும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து 48 ஆம் நாள் மண்டல அபிஷேக நிறைவிழா நடைபெற்றது. இதில் லட்சுமி நரசிம்மருக்கு யாகசாலை அமைத்து பூர்ணாகதியுடன் கூடியசிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்துநிகழ்ச்சியின் இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

First published:

Tags: Local News, Puducherry, Temple