முகப்பு /புதுச்சேரி /

கோடை வெப்பத்தை தணிக்க வேண்டி திருநள்ளாறு கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!

கோடை வெப்பத்தை தணிக்க வேண்டி திருநள்ளாறு கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!

X
காலபைரவருக்கு

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

Tirunallar Dharbaranyeswarar Temple | கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சமடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Karaikal, India

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு ஆலயத்தில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஸ்ரீ காலபைரவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதற்கு முன்பாக பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்து ஸ்ரீபைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிலையில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஸ்ரீகால பைரவரை தரிசித்து அருள்பெற்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Karaikal, Local News, Puducherry, Summer Heat