முகப்பு /புதுச்சேரி /

வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் ஆரோவில்லில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் ஆரோவில்லில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

X
ஆரோவில்லில்

ஆரோவில்லில் வெட்டப்படும் மரங்கள்

Puducherry News| ஆரோவில்லில் வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரி அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில் இங்கு சுமார் 5000 ஏக்கர் அளவில் காடுகள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த காடுகளில் சிறிய சிறிய விலங்கினங்கள் மற்றும் பறவைகள் அரிய வகை மரங்கள் உள்ளன.இங்கு பல்வேறு நாட்டில் இருந்து ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் வாசிகள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் வளர்ச்சி திட்ட பணிகள் மேம்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாலை அமைக்கும் பணி ஆரோவில் நிர்வாகம் சார்பாக நடைபெற்றது.இதில் அரிய வகை மரங்கள் மற்றும் காடுகள் அழிக்கப்படுவது என ஒரு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு அளிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன் பெயரில் வழக்கு விசாரணை முடிந்து ஆரோவில் நிர்வாகம் பணிகளை மேற்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் நேற்று முதல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அங்கு தீர்ப்பின் படி  இல்லாமல் அதிக எண்ணிக்கையில் உள்ள மரங்களை வெட்டி வருவதாகவும் மேலும் அழிந்து வரும் மரங்கள் மற்றும் அறிவகை மரங்களை வெட்டி வருவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் வெளிநாட்டில் மற்றும் உள்ளூர் வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வளர்ச்சித் திட்டப் பணிகள் என்ற பெயரில் அரிய வகை காடுகளை அழித்து வரும் ஆரோவில் நிர்வாகம் தனது போக்கினை கைவிட வேண்டும் என அப்பகுதி இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.....

top videos
    First published:

    Tags: Local News, Puducherry