புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.அந்த குழந்தைக்கு சிறு வயதில் இறந்த விலங்குகளிடம் இருந்து நோய் தொற்று ஏற்பட்டு உடல் நலம் குன்றி பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார். குழந்தையில் நோய் குறித்து மருத்துவர் விவரிக்கையில், இறந்த விலங்குகளிடம் இருந்து நோய் தொற்று ஏற்பட்டதே குழந்தையின் உடல் நிலை குன்றியதற்கு காரணம் என மருத்துவர் தெரிவித்தார்.
இதனால் சமூக ஆர்வலர் சரவணன் கடந்த 13 ஆண்டுகளாக புதுச்சேரியில் எந்த இடங்களில் விலங்குகள் இறந்து கிடந்தாலும் அந்த விலங்குகளை எடுத்து சென்று மயானத்தில் அடக்கம் செய்து வருகிறார். அடக்கம் செய்யும் போது மனிதர்கள் இறந்தால் எவ்வாறு சம்பிரதாயங்கள் செய்து உடல் அடக்கம் செய்யப்படுமோ அதே போல் உயிரிழந்த விலங்குகளையும் அடக்கம் செய்யும்போது சரவணன் மஞ்சள்,குங்குமம் கொட்டி மனிதர்களுக்கு செய்யும் சம்பிரதாயங்கள் செய்கிறார். மேலும் இதுவரை புதுச்சேரியில் சாலையோரங்களில் இறந்து கிடக்கும் 2000க்கும் மேற்பட்ட விலங்குகளை அடக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது குறித்து பேசிய சரவணன், மனிதர்கள் சாலையோரங்களில் அடையாளம் தெரியாத மனிதர்கள் இறந்து கிடந்தால் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அவர்களை நல்லடக்கம் செய்கின்றனர். ஆனால் நாய்கள் மற்ற விலங்கினங்கள் சாலையோரங்களில் இறந்து கிடந்தால் அதை துறை ரீதியான அதிகாரிகள் அடக்கம் செய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இறந்து கிடக்கும் உயிரினத்தால் அப்பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நான் என்னோட மொபைல் நம்பரை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மாநிலம் முழுவதும் சாலை ஓரங்களில் விலங்குகள் இறந்து கிடந்தால் தொடர்பு கொள்ளவும் என்று விளம்பரம் செய்தேன் என்றார்.
இதனை அடுத்து இலவசமாக என் செலவில் சாலையோரங்களில் இறந்து கிடக்கும் விலங்குகளை நல்லடக்கம் செய்து வருகிறேன். மேலும் இதற்கு அரசாங்கம் சாலையோரங்களில் இறந்து கிடக்கும் விலங்குகளை ஏற்றிச் செல்ல ஒரு சிறிய வாகனம் தர வேண்டும் என சமூக ஆர்வலர் சரவணன் கோரிக்கையை வைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry