முகப்பு /புதுச்சேரி /

பறவைகளுக்காக வீட்டையே மினி சரணாலயமாக மாற்றிய புதுச்சேரி இயற்கை ஆர்வலர்!

பறவைகளுக்காக வீட்டையே மினி சரணாலயமாக மாற்றிய புதுச்சேரி இயற்கை ஆர்வலர்!

X
தமிழ்நெஞ்சன்

தமிழ்நெஞ்சன்

ஒரு வேளை உணவு அளிக்கும் மனிதன் மட்டும் வாழ்வதற்கான இடமல்ல பூமி. பல்லுயிரும் பெருக வேண்டும் என்கிறார் இயற்கை ஆர்வலர் தமிழ்நெஞ்சன்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் தமிழ்நெஞ்சன் தனது வீட்டையே பறவைகளின் சரணாலயமாக மாற்றி வைத்துள்ளார்.

புதுச்சேரி சண்முகாபுரம் சுப்ரமணியர் கோயில் வீதியில் வசிப்பவர் தமிழ்நெஞ்சன். செம்படுகை நன்னீரகம் என்ற அமைப்பை வைத்துள்ள இவர், சாலைகளில் மரம் நடுவது, செயற்கை காடுகளை உருவாக்குவது, காடுகளை பாதுகாப்பது என 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை தொண்டாற்றி வருகிறார்.

ஊருக்கு மட்டும் உபதேசமில்லை என நிரூபிக்கும் வகையில் தனது வீட்டையே பறவைகளின் சரணாலயமாக மாற்றி வைத்துள்ளார். இவர் 20 ஆண்டுகளாய் வீட்டின் வெளி புறத்திலும் தோட்டத்திலும் இருக்கும் எந்த ஒரு மரத்தையும் வெட்டுவதில்லை. வீட்டிற்கு குருவிகள் வருவதால் குருவிகளுக்கு ஆபத்து ஏற்படும் என நினைத்து, தான் செளகரியமாக வாழ வேண்டும் என எண்ணாமல் வரவேற்பறையில் இருந்த மின் விசிறியை எடுத்து விட்டார்.

வீட்டில் வளர்க்கும் நாய்கள் மட்டுமல்லாது வீதியில் 10-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தினமும் உணவளித்து வருகிறார். இது மட்டுமல்லாது பூனையால் இறந்த அணில் ஒன்றின் இரு குட்டிகளை வளர்த்து வந்தார் .

அணில் குட்டிகள் வளர்ந்ததும் அவரது வீட்டை சுற்றி தற்பொழுது வலம் வருகிறது. இவர் பின்னால் நாய் குட்டியை போல் பின்னாலே சுற்றி வருகின்றன அணில் குட்டிகள்.

அவற்றை தொடர்ந்து தினமும் காக்கை கூட்டம் இவரது வீட்டை சுற்றி எப்பொழுதும் இருக்கும். தினமும் வரும் காக்கைகளில் ஒரு காகம் மட்டும் இவர் கொடுக்கும் பிஸ்கெட்டை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

இது குறித்து பேசிய இயற்கை ஆர்வலர் தமிழ்நெஞ்சன், “இது எதுவும் வியப்பல்ல. காக்கை குயில் எங்கள் ஜாதி என மகாகவி பாரதி வாழ்ந்த மண் புதுச்சேரி. மனிதனோடு வாழ விரும்பும் பறவைகளையும் விலங்குகளையும் அடித்து விரட்ட வேண்டாம். ஒரு வேளை உணவு அளிக்கும் மனிதன் மட்டும் வாழ்வதற்கான இடமல்ல பூமி. பல்லுயிரும் பெருக வேண்டும் என கூறுகிறார் தமிழ்நெஞ்சன்.

top videos

    பறவைகள் உள்ளிட்ட பிற உயிரினங்களை பாதுகாக்கும் இயற்கை ஆர்வலருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டி தெரிவித்து வருகின்றனர்.

    First published:

    Tags: Local News, Puducherry