முகப்பு /புதுச்சேரி /

"சுருக்கு பை விற்பதால் : இழிவாக பேசி நாயைப் போன்று விரட்டுகிறார்கள்" கண்ணீர் விடும் பெண்கள்!

"சுருக்கு பை விற்பதால் : இழிவாக பேசி நாயைப் போன்று விரட்டுகிறார்கள்" கண்ணீர் விடும் பெண்கள்!

X
சுருக்குப்பை

சுருக்குப்பை விற்கும் பெண்கள்

Puducherry Road side workers | பெண்கள் என்று கூட பார்க்காமல் இழிவாக பேசி நாயைப் போன்று விரட்டி அடிக்கிறார்கள் - சுருக்குப்பை விற்கும் பெண்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஆலத்தூர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெளி மாநில பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில், ஈஸ்வரன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், மற்றும் ஜென்மராக்கினி ஆலயம், தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளிட்ட சுற்றுலா தலம் மற்றும் கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பாரம்பரிய துணிகளில் கைகளால் செய்யப்படும் சுருக்கு பைகள் விற்று வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்தப் சுருக்கு பைகளை புதுச்சேரி வாழ் மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலாவாக வரும் ஏராளமான வெளிநாட்டினர் அந்த பைகளின் டிசைன்களை பார்த்தும் கலர்களை பார்த்தும் பைகளின் வடிவமைப்புகளை பார்த்தும் அதை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இன்றளவும் புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டினர் அந்த சுருக்கு பையிலே காசு, பணம் வைத்து பயன்படுத்தும் நிகழ்வுகளையும் நம் நேரில் பார்க்கலாம்.. அப்படி சுருக்குப்பை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வரும் பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.200-ல் இருந்து 300 வீதம் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும் தங்களது கஷ்டங்களை வேதனையுடன் தெரிவித்தனர்..

இந்த நிலையில் மணக்குள விநாயகர் கோவில் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சுருக்கு பைகளை விற்பனை செய்ய வந்தால், தங்களை பெண்கள் என்று கூட பார்க்காமல் இழிவாக பேசுவதாகவும், தங்களை நாயை போன்று விரட்டி அடிப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

20 ஆண்டுகளாக நாங்கள் புதுச்சேரி மக்களை நம்பி மட்டுமே வியாபாரம் செய்வதாகவும் எனவே அரசு எங்களுக்கென்று ஏதாவது ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

வந்து செல்வதற்கு வண்டிக்கு பெட்ரோல் உள்பட குடும்பத்துடன் சாப்பிட 500 ரூபாய் தேவைப்படும் நிலையில் ரூ. 200, 300க்கே வழியில்லாமல் தங்கள் கஷ்டப்படுவதாகவும், இதை உணராமல் தங்களை விரட்டுவதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Puducherry