புதுச்சேரி என்ற இச்சிறு நிலப்பகுதியில் 500 ஆண்டுகளுக்குள் சுமார் 32 ஆத்ம ஞானிகள் சமாதி எழுந்தருளியுள்ளார்கள். அவர்கள் இவ்வுலகின் எல்லா பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து கடுந்தவம் மேற்கொண்டு இறை தரிசனம் பெற்று இறைவனோடு ஐக்கியமாகி விட்டார்கள்.
ஆத்ம ஞானிகளை தன்னகத்தே அன்போடு அழைத்து அவர்களின் ஆத்ம சாதனைக்கு உதவியும் செய்து அவர்களுக்கு வெற்றியும் தருகிறது புதுவை என்ற இப்புண்ணிய பூமி. ஞானம் விளைகின்ற காரணத்தால், ஞானிகள் தவம் புரியும் இடமாக இருப்பதால்-இப்புதுவையை ஞான பூமி என்றே அழைக்கிறார்கள். அந்த வகையில் புதுச்சேரி அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்கண்டேயர் திருமடம் சார்பாக புதுவை ஆதீனம் முனைவர் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகர சாமி தலைமையில் 6-ஆம் ஆண்டாக புதுவை சித்தருடன் ஒரு நாள் என்ற ஊர்வலம் நடந்தது.
இதில் புதுச்சேரி, சென்னை, திண்டிவனம், விழுப்புரம், சேலம், செஞ்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஆந்திரா ஆகிய பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு புதுவையில் ஜீவசமாதி அடைந்த தொல்லைக்காது சித்தர், நாகலிங்க சாமிகள், குரு அக்கா சாமிகள், வேதாந்த சுவாமிகள், மண் உருட்டி சாமிகள், குரு சித்தானந்தர் சாமிகள், பெரியவருக்கு பெரியவர், கணபதி சுவாமிகள், கம்பளி ஞானதேசிக சாமிகள், சிவ சடையப்பர், அப்பா பைத்தியசாமி, நாகராஜ் பாகவதர், கதிர்வேல் சாமிகள், சக்திவேல் பரமானந்தர், மௌலா சாகிப் முல்லா வீதி, மகான்வண்ணார பரதேசி சுவாமிகள், தேங்காய் சுவாமிகள், ராம் பரதேசி சாமிகள், தக்ஷிணாமூர்த்தி சாமிகள, படேசாகிப் கண்டமங்கலம், குருசாமி அம்மையார் ஆகிய 21 சித்தர் ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் 108 சிவனடியார்களுக்கு சிறந்த சைவ நெறியாளர்கள் விருது வழங்கப்பட்டது.தொடர்ந்து சிவனடியார்கள் கூறும்போது, “சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த சித்தர் கோயில்கள் ஏராளமாக உள்ளதாகவும், இதனால் புதுச்சேரியை சித்தர் பூமி என அழைக்கப்படுகிறது. இதனால் தான் எந்த பேரழிவு வந்தாலும் புதுச்சேரி பாதுகாப்பதாக உள்ளது. மேலும் அனைத்து சித்தர் கோயில்களுக்கும் ஒரே நாளில் சென்றதால் உடல் புத்துணர்வு ஏற்பட்டுள்ளது. இதை ஆண்டுதோறும் கடைபிடிக்க வேண்டும்” என கூறினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry