முகப்பு /புதுச்சேரி /

புதுவை சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலம்..

புதுவை சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலம்..

X
புதுவை

புதுவை சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலம்

Maha sivarathiri poojai | புதுச்சேரியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு சிவன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இரவு முழுவதும் சாமி தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry, India

மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் வரும் சிவராத்திரியே மஹாசிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அனைத்து சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. இதில் இரவு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கருவடிக்குப்பம் குருசித்தானந்தா கோவிலில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு பால், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை என்று 4 கால பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன. இதனையடுத்து சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு முழுவதும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான சிறுமிகள் பல்வேறு நாட்டியங்களை அறங்கேற்றினர். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர். இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இரவு முழுவதும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Puducherry