முகப்பு /புதுச்சேரி /

அந்தமான் போல இனி புதுவையில் ஆழ்கடல் அழகை ரசிக்கலாம்.. தயாராகும் ‘செமி சப்மெரைன்’ படகு...

அந்தமான் போல இனி புதுவையில் ஆழ்கடல் அழகை ரசிக்கலாம்.. தயாராகும் ‘செமி சப்மெரைன்’ படகு...

X
புதுவையில்

புதுவையில் தயாராகும் 'செமி சப்மெரின்' படகு

Semi Submarine Boat : கடல் சுற்றுலா செல்ல விருப்பும் பயணிகள், தங்கள் பயணங்களில் கப்பல் அல்லது படகின் மேல்தளத்தில் இருந்து கடலின் அழகை ரசிப்பதை அதிகமாக விரும்புகின்றனர்.

  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரியில் ஆழ்கடல் அழகை ரசிக்க 'செமி சப்மெரின்' படகு தயாராகி வருகிறது.

ஆழ்கடல் அழகை ரசிக்க நீர்மூழ்கி கப்பலில் செல்ல வேண்டும். இதற்கு அதிக செலவாகும். தற்போது இதற்கு மாற்றாக 'செமி சப் மெரின்' என்றழைக்கப்படும் விசைப் படகுகள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் அமர்ந்தபடி கடல் அழகை ரசிக்கலாம்.

இவ்வாறு, கடலின் அழகை ரசிக்க, இரு புறமும் நீர் புகாத கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடலில் செல்லும் போது படகில் கீழடுக்கு 1.4 மீட்டர் அளவில் ஆழ்கடலில் பயணிப்பதால் கீழ் அடுக்கில் உள்ளவர்கள் ஆழ்கடல் அதிசயங்கள், பவளப் பாறைகள் மற்றும் அரிய வகை நீர் வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கலாம்.

புதுவையில் தயாராகும் 'செமி சப்மெரின்' படகு

இவ்வகை படகுகளில் செல்ல, பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், இந்த படகுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, அந்தமான் தீவுகளில் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, அந்தமானில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திற்காக நாட்டிலேயே முதல்முறையாக புதுவையில் உள்ள பி.என்.டி.படகு கட்டும் தனியார் நிறுவனம், உப்பளம் துறைமுகத்தில் ரூ.4 கோடி செலவில் 'டிரை மரான்' எனும் செமி சப் மெரின் விசைப் படகு தயாரித்து வருகிறது.

இதையும் படிங்க : குடும்பத்தோடு போய் என்ஜாய் பன்னுங்க..! குமரியில் களைகட்டிய கோடை பொருட்காட்சி..!

சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலுமினியத்தால் 16 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில், ஒரே நேரத்தில் 50 பேர் பயணிக்கும் வகையில் விசைப்படகு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில், மேல் தளத்தில் 25 பேரும், கீழ் தளத்தில் 25 பேரும் பயணிக்கலாம். ஆழ்கடல் அழகை ரசித்திட படகின் இருபுறத்திலும் நீர் புகாத 14 கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், ஆழ்கடலில் செல்லும்போது படகு ஆடாமல் பயணிக்க இருபுறமும் இறக்கை போன்ற அமைப்புடன் படகு கட்டப்பட்டு வருவதால் இதன் பெயர் 'டிரை மரான்' என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    First published:

    Tags: Local News, Puducherry, Travel