முகப்பு /புதுச்சேரி /

இரண்டாம் உலக போர் நிறுத்த தினம் : புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு போர் வீரர் நினைவிடத்தில் அஞ்சலி!

இரண்டாம் உலக போர் நிறுத்த தினம் : புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு போர் வீரர் நினைவிடத்தில் அஞ்சலி!

X
2-ம்

2-ம் உலக போர் நிறுத்த தினம் அனுசரிப்பு

உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு போர் வீரர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

இரண்டாம் உலகப் போர் முடிந்த 78-வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள பிரெஞ்சு போர் வீரர் நினைவிடத்தில் இந்தியா மற்றும் பிரான்சு அரசாங்கத்தின் சார்பில்  அஞ்சலி செலுத்தப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் முடிந்ததின் 78-வது ஆண்டு நினைவு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்ச் போர் வீரர் நினைவு சின்னத்தில் இரண்டாம் உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இந்தியா மற்றும் பிரான்சு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

சென்னையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் துணைத்தூதர் புருனோ நுயென் மற்றும் புதுச்சேரி அரசு சார்பில் துணை மாவட்ட ஆட்சியர் ரோமில்சிங் டாங்க், மற்றும் பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு போர் வீரர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

top videos

    இந்நிகழ்ச்சியில் பிரெஞ்ச் முன்னாள் ராணுவ வீரர்கள், புதுச்சேரியில் வாழும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    First published:

    Tags: Local News, Puducherry