முகப்பு /செய்தி /புதுச்சேரி / புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் வரும் 14ஆம் தேதி திறக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் வரும் 14ஆம் தேதி திறக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு

பள்ளிகள் திறப்பு தேதி- காட்சிப் படம்

பள்ளிகள் திறப்பு தேதி- காட்சிப் படம்

வெயில் தாக்கம் கடுமையாக அதிகரித்த வண்ணம் உள்ளதால் பள்ளியில் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்ற பலரும் கோரிக்கை வைத்தனர.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) |

புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் வரும் 14ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் வெயில் தாக்கம் கடுமையாக அதிகரித்த வண்ணம் உள்ளதால் பள்ளியில் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்ற பலரும் கோரிக்கை வைத்தனர. இந்த நிலையில் அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பதிலளித்த முதலமைச்சர், “புதுச்சேரியில் வெயில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வண்ணமே இருப்பதினால் பள்ளி திறப்பு தேதியை ஒரு வார காலத்திற்கு தள்ளி வைக்கிறோம். அனைத்து பள்ளிகளும் 14ஆம் தேதி திறக்கப்படும்”  என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கஇஞ்சினீயரிங் படிக்க 2.28 லட்சம் பேர் விண்ணப்பம்... கலந்தாய்வு இன்று தொடங்கியது...!

இதன்படி புதுச்சேரி,காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்திகளில் உள்ள ஒன்று முதல் 12 வகுப்புகளுக்கு 14ஆம் தேதி திறக்கப்படுகிறது என்பது குறிப்பிட தக்கது.

First published:

Tags: Puducherry, School Reopen, Summer Heat