முகப்பு /புதுச்சேரி /

சங்கடஹர சதுர்த்தியில் தங்க கவசம் அணிந்து அருள்பாலித்த புதுச்சேரி மொரட்டாண்டி சொர்ண சிதம்பர கணபதி!

சங்கடஹர சதுர்த்தியில் தங்க கவசம் அணிந்து அருள்பாலித்த புதுச்சேரி மொரட்டாண்டி சொர்ண சிதம்பர கணபதி!

X
புதுச்சேரி

புதுச்சேரி மொரட்டாண்டி சொர்ண சிதம்பர கணபதி

Sankatagara Chadurthi : சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் ஆலயத்தில்  உள்ள ஸ்ரீசொர்ண சிதம்பர கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

சங்கடஹர சதுர்த்தி விரதம் இந்து மக்களால் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் வளர்பிறையில் வரும் சதுர்த்தி திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும். இந்நாளில் பகல் பொழுது முழுவதும் உண்ணா நோன்பிருந்து மாலையில் விநாயகரை பூஜை செய்து உடன் சந்திரனையும் தரிசித்தல் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

இந்நிலையில், புதுச்சேரி மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் ஆலயத்தில் உள்ள ஸ்ரீசொர்ண சிதம்பர கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தங்கக்கவசம் சாத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து மந்திரங்கள் ஓதி சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Puducherry