முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் இடுகாட்டில் நடந்த சமாதி திருவிழா.. இறந்த உறவினர்களுக்கு படையல்!

புதுவையில் இடுகாட்டில் நடந்த சமாதி திருவிழா.. இறந்த உறவினர்களுக்கு படையல்!

X
இடுகாட்டில்

இடுகாட்டில் சமாதி திருவிழா

Puducherry News | புதுவையில் இறந்த உறவினர்களின் நினைவாக சமாதி திருவிழா நடைபெற்றது. அதில் இறந்தவர்களுக்கு படையல் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கல்லறை திருவிழா அனுசரிப்பதை போல புதுவை மாநிலத்தில் உள்ள 21 கிராம ஆதிதிராவிடர் பஞ்சாயத்து குழு கூட்டமைப்பு சார்பில் துப்புராயப்பேட்டை சன்னியாசி தோப்பில் உள்ள இடுகாட்டில் சமாதி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 21-வது ஆண்டாக இந்த ஆண்டும் சமாதி திருவிழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் சமாதியை அவர்களது உறவினர்கள் சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்து வைத்திருந்தனர். இறந்தவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படையலிட்டு அஞ்சலி செலுத்தினர்.

இதன்பின் இடுகாட்டுக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அம்மன் சிலைக்கு பொதுமக்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். சமாதி திருவிழாவை முன்னிட்டு அந்த பகுதியில் ஏராளமான தெருவோர கடைகள் புதிதாக முளைத்திருந்தன.

First published:

Tags: Local News, Puducherry