முகப்பு /புதுச்சேரி /

50 Not Out.. வயதில் அரைசதம் அடித்த சச்சின் டெண்டுல்கருக்கு புதுவை ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து..!

50 Not Out.. வயதில் அரைசதம் அடித்த சச்சின் டெண்டுல்கருக்கு புதுவை ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து..!

X
சச்சின்

சச்சின் டெண்டுல்கர்

Sachin Tendulkar Birthday : அதிக ரன்கள் அதிக சதங்கள், அதிக போட்டிகள், அதிக ஆட்டநாயகன் விருது, சதத்தில் சதம் என்று எண்ணிலடங்காத சாதனைகளை படைத்தவர் சச்சின் டெண்டுல்கர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். தோனி, விராட், ரோகித் என்று இன்று கரகோஷம் எழுப்பும் ரசிகர்கள் கூட்டம், ஒரு காலத்தில் ஒன்றாக சேர்ந்து ஆர்ப்பரித்த ஒரே பெயர் ‘சச்சின் டெண்டுல்கர்’.

அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக போட்டிகள், அதிக ஆட்டநாயகன் விருது, சதத்தில் சதம் என்று எண்ணிலடங்காத சாதனைகளை படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். எப்படி கால்பந்திற்கு பீலேவோ, அதேபோல கிரிக்கெட்டிற்கு ஒரு சச்சின் என்றே சொல்லலாம்.

சச்சின் டெண்டுல்கர்

இதையும் படிங்க : Video: பஞ்சாபி பாடலுக்கு குத்தாட்டம்.. கால் சுளுக்க ஆட்டம் போட்ட கோலி.. வெடித்து சிரித்த அனுஷ்கா!

ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்தால் இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு சென்ற நாட்கள் எல்லாம் உண்டு.

இந்நிலையில், அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் மத்திய அரசு அவருக்கு நியமன எம்.பி. பதவி கொடுத்து கவுரவித்தது. அப்பேற்பட்ட ஜாம்பவானுக்கு இன்று 50வது பிறந்தநாள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Cricket, Local News, Puducherry, Sachin Tendulkar