முகப்பு /புதுச்சேரி /

பசுமை நிறைந்த நினைவுகளே..! புதுவை அரசு பள்ளியில் 38 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் ரீயூனியன்..!

பசுமை நிறைந்த நினைவுகளே..! புதுவை அரசு பள்ளியில் 38 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் ரீயூனியன்..!

X
ஆசிரியர்களின்

ஆசிரியர்களின் காலில் விழுந்த முன்னாள் மாணவர்கள்

Sithalampatti Government School : புதுச்சேரி அரசு பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் பாதத்தை தொட்டு வணங்கி கண்ணீர் மல்க நன்றி கடன் செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அரசு பள்ளியில் 38 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

பெற்றோரையும், உறவினர்களையும் தாண்டி மாணவர்களுக்கான சமூக உறவை ஏற்படுத்தித் தரும் உன்னத இடம் பள்ளிக்கூடம். இங்கிருந்துதான் சமூகத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து படிக்கவும், படித்தவற்றைக் கொண்டு பக்குவமடையவும், கற்ற கல்வியால் வாழ்க்கையை நன்கு அமைத்துக்கொள்ளவும் கற்றுக்கொள்கிறார்கள்.

மாணவப் பருவத்தில் பள்ளிக் கூடம் கசந்தாலும், படித்து நல்ல நிலைக்குச் செல்ல அச்சாணியாக இருந்தது பள்ளிக்கூடமும் அங்கு கல்வி போதித்த ஆசிரியர்களும் தான் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், அவர்களது அர்ப்பணிப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்த ஒவ்வொரு பழைய மாணவரின் மனசாட்சியிலும் இது ஒலித்துக்கொண்டிருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு நெகிழ்ச்சி சம்பவம் தான் புதுச்சேரியில் நடந்துள்ளது. தமிழ்நாடு - புதுச்சேரி மாநில எல்லையான திருக்கனூர் அடுத்த சித்தலம்பட்டில் பச்சை பசேல் என்று இயற்கை சூழலுக்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்த அரசு பள்ளியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இன்று வரை பயின்று பயனடைந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஒரே மரத்தில் 4 வகையான மாங்கனிகள்.. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு படையெடுக்கும் மக்கள்!

இந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர்களாகவும், அரசுத்துறை அதிகாரிகளாகவும், தனியார் நிறுவன அதிகாரிகளாகவும், பெரிய தொழில் அதிபர்களாகவும்வளர்ந்து இருக்கிறார்கள். இந்த சித்தலம்பட்டு அரசு பள்ளியில் 1985 மற்றும் 86ம் ஆண்டில் 10ம் வகுப்பு படித்த மாணவர்கள் ஸ்கூல் பிரண்ட்ஸ் குரூப் சித்தலம்பட்டு என்ற whatsapp குழுவை உருவாக்கி இங்கு படித்த மாணவர்களை ஒன்றிணைத்தனர்.

இந்த முன்னாள் மாணவர்கள் தான், தாங்கள் படித்த பள்ளிக்கு நாம் ஏதாவது ஒரு பொருள் உதவி செய்ய வேண்டும், தமக்கு பாடம் சொல்லிக் கொடுத்து தம்மை வாழ்க்கையில் முன்னேற்றிய ஆசிரியர்களுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னாள் மாணவர்களின் சங்கமம் நிகழ்ச்சி சித்தலம்பட்டு அரசு பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 1985 மட்டும் 86ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 38 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக சந்தித்த சுமார் 55 -வயது வரை உள்ள முன்னாள் மாணவர்கள 60-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி குருபூர்ணிமா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின் மூலம் ஒவ்வொருவரும்,தங்களின் பழைய நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்தது மட்டுமல்லாமல், பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் செல்பி எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், குழு புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கி கௌரவித்தனர்.

மேலும் 1985 மற்றும் 86ம் ஆண்டு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களை வரிசையாக நிற்க வைத்து அவர்களிடம் படித்த மாணவர்களும் வரிசையாக நின்று அவர்களின் காலில் விழுந்து பாதம் தொட்டு வணங்கி தங்களது நன்றி கடனை கண்ணீர் மல்க மகிழ்ச்சியுடன் செலுத்தினர்.  பதிலுக்கு ஆசிரியர்களும் எல்லா வளமும் பெற்று வாழ்க வாழ்க பல நூறு ஆண்டு என்ற பாடலை பாடி அவர்களை மலர் தூவி வாழ்த்தினார்கள்.இந்த நிகழ்வு பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.

இதையும் படிங்க : பாரதிதாசன் நினைவு தினம்.. புதுச்சேரியில் பாவேந்தர் பாடலை வீரமுடன் முழங்கிய சிறுமி!

இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறும்போது, “கடந்த 20 ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றி இருந்தாலும் அப்போதெல்லாம் கிடைக்காத சந்தோஷம் இந்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் கிடைக்கிறது. உடல்நிலை சரியில்லாத போனாலும் மருத்துவர் இல்லாமலே இந்த நிகழ்ச்சி பார்க்கும்போது உடல்நிலை சரியாகியுள்ளது.

நாங்கள் படித்த பள்ளிக்கு தமக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியருக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்தோடு இந்த முன்னாள் மாணவர் நிகழ்ச்சி நடத்தினோம்” என தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    முன்னாள் மாணவர்கள் தங்களுடன் படித்த பழைய மாணவர்களை பார்க்கும்போது உள்ளம் மகிழ்ந்து மன நிறைவோடு உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் மட்டுமின்றி அவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றனர் இந்த சம்பவம் ஒரு பெரும் நெகிழ்ச்சியாக அமைந்திருந்தது.

    First published:

    Tags: Local News, Puducherry