முகப்பு /புதுச்சேரி /

2 நாட்களாக வாய்க்காலில் சிக்கித்தவித்த பசு மாடு மீட்பு.. குவியும் பாராட்டு!

2 நாட்களாக வாய்க்காலில் சிக்கித்தவித்த பசு மாடு மீட்பு.. குவியும் பாராட்டு!

X
பசு

பசு மாடு மீட்பு

Puducherry News | புதுச்சேரி மாநிலம் முலக்குளம் பகுதியில்  6 அடி ஆழம் உள்ள வாய்க்காலில் இரண்டு நாட்களாக விழுந்து தவித்துக் கொண்டிருந்த பசு மாட்டை  தீயணைப்பு துறை வீரர்கள் போராடி மீட்டனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மாநிலம் முலக்குளம் பகுதியில் சாலையோரத்தில் 6 அடி ஆழம் கொண்ட வாய்க்கால் உள்ளது. இப்பகுதியில் நாள்தோறும் இரவு பகல் பாராமல் பசு மாடுகள் நடமாடிக் கொண்டிருக்கும். இதில் ஒரு பசுமாடு இரவு நேரத்தில் நிலை தடுமாறி வாய்க்காலில் விழுந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக விழுந்து தவித்துக் கொண்டிருந்த பசு மாட்டை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் கோரிமேடு தீயணைப்பு நிலைய அதிகாரி சுரேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பலராமன், நடராஜன், வசந்த், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பசுமாட்டின் உடம்பில் கயிறு கட்டி பொதுமக்கள் உதவியுடன் போராடி மீட்டனர். பசுமாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

top videos
    First published:

    Tags: Cow, Local News, Police Rescued, Puducherry