ஹோம் /புதுச்சேரி /

குடியரசு தினம் | வண்ண விளக்கொளியில் மின்னும் புதுவை அரசு கட்டிடங்கள்

குடியரசு தினம் | வண்ண விளக்கொளியில் மின்னும் புதுவை அரசு கட்டிடங்கள்

X
புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை

Puducherry | குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

நாடு முழுவதும் குடியரசு தின விழா 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை சிறப்பாக கொண்டாட புதுச்சேரி அரசு பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. கடற்கரை சாலையில் தேசிய கொடியை துணைநிலை ஆளுநர் தமிழிசை ஏற்றினார்.

சட்டமன்றத்தில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். விழாவை ஒட்டிஅரசு கட்டிடங்கள் வண்ண விளக்கொளியால் மின்னுகிறது.

புதுச்சேரி அரசின் நினைவு சின்னமான, ஆயி மண்டபம் மற்றும் சட்டமன்ற கட்டிடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக ஜொலிக்கிறது.இதே போல் ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரும் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.இந்த இரண்டுகட்டிடங்களும் 26 ம் தேதி பொது மக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுகிறது.

குடியரசு தினக் கொண்டாட்டம்.. வண்ண விளக்கொளியில் மின்னும் புதுச்சேரி அரசு கட்டிடங்கள்

இதே போல் கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலக கட்டிடம் மின் விளக்குகளில் ஜொலிக்கிறது அதேபோல்தேசிய கொடியும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிகிறது. மேலும் 30,31ம் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி மின் விளக்கில் "ஜி 20 இந்தியா" என்ற வாசகமும் சேர்ந்து ஒளிருகிறது. இவற்றையெல்லாம் பார்த்து சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

First published:

Tags: Local News, Puducherry