முகப்பு /புதுச்சேரி /

Ramadan 2023 : புதுச்சேரி கடற்கரையில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

Ramadan 2023 : புதுச்சேரி கடற்கரையில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

X
கடற்கரையில்

கடற்கரையில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

Ramzan Festival In Pondicherry : இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் புதுச்சேரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகையானது, இஸ்லாமியர்கள் நோன்பிருந்து தொழுகைகள் செய்து வந்த நிலையில் நேற்றைய தினம் (ஏப்ரல் 21) வானில் தோன்றிய பிறையின் அடிப்படையில் இன்று (ஏப்ரல் 22) ரமலான் பண்டிக்கை கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிக்கைக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அளித்துள்ளது.

குறிப்பாக புதுச்சேரியில் உள்ள ஜிம்மா மஸ்ஜித், சுல்தான் பேட்டையில் உள்ள பள்ளிவாசல், நெல்லித்தோப்பு மசூதி, காரைக்காலில் உள்ள பெரியபள்ளி வாசல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பள்ளி வாசல்களில் இன்று விடியற்காலை முதல் நடைபெற்ற சிறப்புத்தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுப்பட்டு அனைவரும் நலமுடன் வாழ வேண்டும், நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

கடற்கரையில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

இதையும் படிங்க : விருதுநகரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை.. ஆரத்தழுவி அன்பை பகிர்ந்த இஸ்லாமியர்கள்!

தொழுகை நடைபெறும் அனைத்து பள்ளிவாசல்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் கடற்கரை சாலை காந்தி திடல் எதிரே தவ்ஹீத் ஜமா்அத் சார்பில் நடைபெறும். ரமலான் சிறப்பு தொழுகையில் 500 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry, Ramzan