முகப்பு /புதுச்சேரி /

ராம நவமியை முன்னிட்டு பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 2000 லிட்டர் பாலை கொண்டு சிறப்பு அபிஷேகம்..

ராம நவமியை முன்னிட்டு பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 2000 லிட்டர் பாலை கொண்டு சிறப்பு அபிஷேகம்..

X
பஞ்சவடி

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 2000 லிட்டர் பாலை கொண்டு சிறப்பு அபிஷேகம்

Puducherry News | ராம நவமியை முன்னிட்டு புதுவை அருகே உள்ள புகழ்பெற்ற பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 2000 லிட்டர் பால் உள்ளிட்ட திவ்ய திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

விஷ்ணுவின் அவதாரமான ராமர் பிறந்த நாளை ராமநவமி என்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் ராம நவமியை முன்னிட்டு இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

ராம பக்தரான ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ளது 36 அடி ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் ராம நவமியை முன்னிட்டு 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிக்கு 2000 லிட்டர் பால் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    முன்னதாக உற்சவர் ஶ்ரீ ராம மூர்த்திக்கு புண்ஹாவசனம் விசேஷ மூலமந்திரம் யாகம் உள்ளிட்டவை நடந்தது. அதனைத்தொடர்ந்து ராமர் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது....

    First published:

    Tags: Local News, Puducherry