தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி.ஆரின் நூற்றாண்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டார். அப்போது, “பாலய்யாவை புகந்து தள்ளிய ரஜினி, அவர் கண் அடித்தால் ஜீப் பற்றி எரிந்து 30 அடிக்கு மேல் பறக்கும். இதை ரஜினி, ஷாருக்கான் செஞ்சா ஒத்துக்க மாட்டாங்க. பாலய்யா செய்தால் தான் ஒத்துக்குவாங்க என்றார். இதே விழாவில் சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி.அவருடைய தொலைநோக்கு பார்வையின் காரணமாகவே ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக உருவெடுத்துள்ளது. நியூயார்க் நகரம் போல் சிறப்பு அடைந்துள்ளது எனப் பேசினார்.
நடிகர் ரஜினியின் இந்தப்பேச்சுக்கு நடிகையும் அமைச்சருமான ரோஜா எதிர்வினையாற்றியுள்ளார். புதுச்சேரியில் பேசிய ரோஜா, “சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக பவன் குமார், ரஜினிகாந்த் போன்றவர்கள் யார் வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை ஒன்று செய்ய முடியாது. பெரிய நடிகர்களில் பேசி பேசியே ஜீரோ ஆனவர் நடிகர் ரஜினிகாந்த் இது அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
என்டிஆர் மேலிருந்து ஆசிர்வாதம் செய்கிறார் என்று ரஜினிகாந்த் சொன்னது தவறு. ரஜினி ஏதோ தெரியாமல் தவறாக பேசுகிறார் என்று எண்ணினேன் ஆனால் அது அவர் தெரிந்தே பேசி உள்ளார். ரஜினிகாந்த் பேசியதை பார்த்து தெலங்கானாவில் உள்ள என்டிஆர் அபிமானிகள் மக்கள் அனைவரும் கோபத்தில் உள்ளனர்” என ரோஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "அப்போதும்.. இப்போதும்; அதிமுக டெல்லி சொல்வதையே கேட்கிறது..!" - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
மேலும் பேசியவர், “என்.டி.ஆர்-ஐ கொலை செய்ய யார் திட்டம் போட்டாரோ அவரையே நல்லவர் என்று ரஜினிகாந்து பேசுவது தவறு. அரசியலுக்கு வர வேண்டும் என்று இல்லாத பொழுது சந்திரபாபு நாயுடு ரஜினிகாந்த் வீட்டுக்கு அழைத்தார் சாப்பிட்டார் ஸ்கிரிப்ட் கொடுத்தார் படித்தார் என்று இல்லாமல். ஆந்திர அரசியலை பற்றி தெரியாத ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடு கூப்டார் என்பதற்காக ஐடியாவை ஐடியாவே இல்லாமல் பேசும் ரஜினி தற்போது ஜீரோவாகியுள்ளார்
மற்ற மாநிலங்களுக்கு நடிகர்கள் போகும்போது அந்த மாநிலங்களை தெரிந்து பேச வேண்டும் இல்லையென்றால் சைலன்டாக இருந்து விட வேண்டும். ரஜினிகாந்த் பேசுவது பேசியது குறித்து தெளிவாக ஒரு அறிக்கை அவர் வெளியிட வேண்டும்.ஜெகன்மோகன் ரெட்டி மாதிரி ஒரு முதலமைச்சரை எங்குமே பார்க்க முடியாது.
ஜெகன்மோகன் ரெட்டி ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான நிதி உதவிகளை செய்துள்ளார். சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக பவன் கல்யாண் ரஜினிகாந்த் ஆகியோர் தனித்தனியாக வந்தாலும் ஒன்றாக சேர்ந்து வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை ஒன்றுமே செய்ய முடியாது.” என்று புதுச்சேரியில் ஆந்திரா அமைச்சரும் நடிகருமான ரோஜா தெரிவித்துள்ளார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Roja, Rajinikanth, Super Star, Tamil News