புதுவையில் கல்லூரி மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுவையை சேர்ந்த கல்லூரி மாணவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஆபாச தகவல்கள், புகைப்படங்கள் தொடர்ச்சியாக வந்துள்ளன. அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அந்த மாணவி, அந்த பக்கத்தை பிளாக் செய்துள்ளார். பின்னர் மற்றொரு அக்கவுண்டில் இருந்து அந்த மாணவிக்கு ஏராளமான புகைப்படங்கள் வந்துள்ளன. அதில், அந்த மாணவியின் நிர்வாண புகைப்படங்களே இருந்ததை பார்த்து அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் அந்த மாணவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர், தன்னை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என்று தெரிவித்து இருக்கிறார். போலீஸ் என்பதால் பயந்து அந்த மாணவி தொடர்ந்து பேசிய நிலையில், தான் கூப்பிடும்போது வீடியோ கால் வரவேண்டும், தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்.
தனது ஆசைக்கு இணங்காமல், அக்கவுண்டை பிளாக் செய்தால் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்றும் அந்த நபர் மிரட்டியிருக்கிறார். ஆபாச புகைப்பட மிரட்டல் தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி புகார் கொடுத்தார்.
மர்ம நபர் பேசிய செல்போன் எண், இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை வைத்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் புதுவையை சேர்ந்த 27 வயதான பிரபாகரன் என்பவர் சிக்கினார். அவரது செல்போனை வாங்கி சோதனை நடத்தியபோது பல பெண்களை இதேப்போல ஏமாற்றி இருப்பது தெரிந்தது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து, அதை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து மிரட்டி இருக்கிறார் பிரபாகரன். புதுவையில் பிரபல ஷாப்பிங் மாலில் ஊழியராக இருக்கும் பிரபாகரன் அங்கு வரும் பெண்களை பார்த்து ஆசைப்பட்டு, இந்த செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிவித்து இருக்கிறார்.
இதையும் வாசிக்க: புத்தக திருவிழாவிற்கு ஏற்பாடு செய்த இளைஞர்கள்.. நெகிழ்ந்த புதுச்சேரி மக்கள்..
பிரபாகரனை கைது செய்த போலீசார் புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதுபோன்ற சைபர் கிரைம் புகார்களுக்கு 1930 என்ற இலவச தொலைப்பேசி எண்ணை அழைக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர். தனது குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்து போலீஸ் உதவியை உடனே பெறலாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Cyber crime, Online crime, Puducherry