முகப்பு /புதுச்சேரி /

கணுவாப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் விமர்சையாக நடைபெற்ற ரணக்களிப்பு நிகழ்ச்சி...

கணுவாப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் விமர்சையாக நடைபெற்ற ரணக்களிப்பு நிகழ்ச்சி...

X
ரணகளிப்பு

ரணகளிப்பு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

Puducherry New | புதுவை கணுவாப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ரணக்களிப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதில் வேளாண் துறை அமைச்சர்  ஜெயக்குமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்..

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த கணுவாபேட்டை புதுநகரில் எழுந்தருளியிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 44 ஆம் ஆண்டு மகோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு மேலும் நவதானியங்கள் மற்றும் 9 வகை திரவங்களால் பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு இருளன் கப்பரை, பூவால் கப்பரை மாவால் கப்பரை, அக்னி கரகம், மோகன கப்பரை மற்றும் பூங்கரகம் ஆகிய வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடர்ந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு ரணக்களிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Puducherry