முகப்பு /புதுச்சேரி /

புத்தக திருவிழாவிற்கு ஏற்பாடு செய்த இளைஞர்கள்.. நெகிழ்ந்த புதுச்சேரி மக்கள்..

புத்தக திருவிழாவிற்கு ஏற்பாடு செய்த இளைஞர்கள்.. நெகிழ்ந்த புதுச்சேரி மக்கள்..

X
புத்தக

புத்தக திருவிழா

Puducherry News : புதுவையில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி  3ம் ஆண்டாக புத்தக கண்காட்சி கிருமாம்பாக்கத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தொடங்கியது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

நாம் அனைவரும் கல்வி கற்க வேண்டும், அறியாமையில் இருந்து விலக வேண்டும் என்று இவ்வுலகில் தோன்றிய பகுத்தறிவாளர்கள் பலர் சொல்லி சென்று உள்ளனர். அதன் நினைவாக வீட்டுக்கு ஒரு நூலகம் அமைப்போம் என்ற குறிக்கோளில் ஒவ்வொரு கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை மேம்படுத்த மாணவ, மாணவிகளுக்கு படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் சிறுவர்கள், மாணவ, மாணவிகள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் குத்து விளக்கு ஏற்றி புத்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த விழாவில் பெரியார், நீளம், நியூ செஞ்சுரி புக் ஸ்டால் , அறம் உள்ளிட்ட பதிப்பகங்கள் கலந்துகொண்டன. இந்த ஏற்பாட்டினை கிருமாம்பாக்கம் சட்டமேதை டாக்டர் பீமாராவ் இளைஞர் நற்பணி மன்றம் செய்திருந்தது.

    First published:

    Tags: Local News, Puducherry