முகப்பு /புதுச்சேரி /

"காதலர்களை அனுமதிக்க மாட்டோம்" புதுச்சேரியில் ரகளையில் ஈடுபட்ட 2k கிட்ஸ்!

"காதலர்களை அனுமதிக்க மாட்டோம்" புதுச்சேரியில் ரகளையில் ஈடுபட்ட 2k கிட்ஸ்!

X
காதலர்களை

காதலர்களை அனுமதிக்காத இளைஞர்கள்

Puducherry lovers not allowed | புதுவையில் காதலர் தினத்தையொட்டி காதல் ஜோடிகள் குவிந்தனர். பாரதி பூங்காவில் அனுமதி மற்றுக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry

உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதலர்கள் பூங்கா, கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் கூடி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். காதலர் தினத்தை கொண்டாட வெளிமாநிலங்களில் இருந்து காதல் ஜோடிகள் புதுவைக்கு வந்தனர். அவர்கள் அதிகாலையிலேயே கடற்கரைக்கு வந்து அன்பு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். உள்ளூர் காதலர்கள் சிலரும் அங்கு வந்து காதலர் தின வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். காதலின் அடையாளமான ரோஜா பூ உள்ளிட்ட பூக்கள் மற்றும் பரிசுப் பொருட்களின் விற்பனையும் அமோகமாக இருந்தது. நகரின் ஒயிட் டவுண் பகுதியில் உள்ள சாலைகளில் அதிக காதல் ஜோடிகள் காணப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை எதிரே உள்ள பாரதி பூங்கா வழக்கம்போல் பூங்கா திறக்கப்பட்டது. அப்போது கல்லூரி மாணவர்கள் அங்கு வந்து காதல் ஜோடிகளை பூங்காவில் சென்ற காதல் ஜோடிகளை அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாணவர்களிடம் பேசி சமதானம் செய்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில் பூங்கா என்பது நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும் சிறுவர் சிறுமிகள் விளையாடுவதற்கும் கலந்த ஆலோசனை செய்வதற்கும்தான் பூங்கா ஆனால் புதுவையில் காதல் ஜோடிகள் என்று கூறி அட்டூழியம் செய்கிறார்கள் இதனால் மாணவர்கள் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றன என இதனை கருத்தில் கொண்டு காதல் ஜோடிகளை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர்.

First published:

Tags: Local News, Lovers day, Puducherry, Valentine's day