முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் எமனை மிரட்டும் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை...

புதுச்சேரியில் எமனை மிரட்டும் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை...

X
எமனை

எமனை மிரட்டும் சிவபெருமான்

Puducherry Sivan Temple | புதுச்சேரியில் எமனை மிரட்டும் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான ஆலகிராமம் பகுதியில் கோவில் கொண்டுள்ள பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி உடனுறை எமன் பயம் நீக்கும் எமதண்டீஸ்வரர் சிவாலயத்தில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு ருத்ர யாகம் நடைபெற்றது.

புதுச்சேரி -தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ள ஆலகிராமம் பகுதியில் கோவில் கொண்டுள்ள பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி உடனுறை எமன் பயம் நீக்கும் எமதண்டீஸ்வரர் சிவாலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த நிலையில் இந்த ஆலயத்தில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு ருத்ர யாகம் நடைபெற்றது.இதனை முன்னிட்டு ஆலய வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு அதில் பல்வேறு வகையான திரவியங்கள், வாசனைப் பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், நவதானிய பொருட்கள் உள்ளிட்டவை செலுத்தப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனை தொடர்ந்து பூர்ணாஹூதி செலுத்தப்பட்டது. பின்னர் பூஜிக்கப்பட்ட கலச நீர் உற்சவர் திரிபுரசுந்தரி, எமதண்டீஸ்வரர் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இந்த யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

First published:

Tags: Local News, Puducherry