முகப்பு /புதுச்சேரி /

ஏழை மாணவர்களுக்கு இலவசமாக தற்காப்பு கலை கற்றுத்தரும் புதுச்சேரி பெண்!

ஏழை மாணவர்களுக்கு இலவசமாக தற்காப்பு கலை கற்றுத்தரும் புதுச்சேரி பெண்!

X
தற்காப்பு

தற்காப்பு கலையை இலவசமாக கற்று தரும் பெண்

Puducherry Lady : புதுச்சேரியில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக தற்காப்பு கலை கற்றுத்தரும் புதுச்சேரி பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

இந்தியாவில் இருக்கு பல முக்கிய துறைகளில், இன்று ஆண்களை விட பெண்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் . நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்கு மிக முக்கியமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவர் சிறுவயது முதல் தற்காப்பு கலையில் ஆர்வம் கொண்டதால் கராத்தே கற்று கொண்டு மாநில அளவில் தேசிய அளவிலும் பல்வேறு விருதுகள் வாங்கி சாதனை படைத்துள்ளார்.

தொடர்ந்து பென்காக் சால்ட் தற்காப்புக் கலையை கற்றுக்கொண்டு உலக அளவில் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தான் கற்ற தற்காப்பு கலையை புதுச்சேரியில் உள்ள, ஏழை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கோடை காலமான தற்போது இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து காயத்ரி கூறுகையில், சிறு வயது முதல் தற்காப்பு கலை கற்று வருகிறேன். இதன் மீது ஆர்வம் அதிகமானதால் தொடர்ந்து மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளேன்.

தொடர்ந்து பெண்காக் சிலாட் (தற்காப்பு கலை) பற்றி தெரிந்து கொண்டு அதில் முழு ஆர்வத்துடன் ஈடுபட்டு உலக அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளேன் என்று கூறினார்.

மேலும், தான் கற்ற கலையை மற்றவர்களும் தெரிந்து கொள்வதற்காக தற்போது கோடை காலத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி கற்று வருகிறேன். அத்துடன், இந்த தற்காப்பு பயிற்சி கற்றுக்கொண்டு உலக அளவில் பதக்கங்களைப் பெற்றால் அரசு வேலைகள் பெற வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Martial arts, Puducherry