முகப்பு /செய்தி /புதுச்சேரி / புதுச்சேரியில் மக்கள் பணிகளுக்கிடையே மகன்களுக்கு படிப்பு சொல்லித் தரும் பெண் அமைச்சர்

புதுச்சேரியில் மக்கள் பணிகளுக்கிடையே மகன்களுக்கு படிப்பு சொல்லித் தரும் பெண் அமைச்சர்

புதுச்சேரி அமைச்சர்

புதுச்சேரி அமைச்சர்

புதுச்சேரியில் அலுவலகத்தில் வைத்து மகன்களுக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா பாடம் சொல்லித்தருகிறார்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது மக்கள் பணிகளுக்கு இடையே தனது அலுவலகத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது மகன்களுக்கு பள்ளி பாட வகுப்புகளை சொல்லிக் கொடுத்து வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் காரைக்காலை சேர்ந்த சந்திர பிரியங்கா. இவருக்கு குழந்தைகள், சிறுவர் சிறுமிகள் மீது பிரியம் அதிகம். அவ்வப்போது  சிறுவர்களுடன் விளையாடுவது, அவர்களுடன் பயணம் செய்து மகிழ்ந்து வருகிறார்.

இவருக்கு பிரனீல் ஸ்டாலின், சந்திர கிருஷ்னீல் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். புதுச்சேரியில் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் பணியில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலக அறையில் அமர்ந்து மக்கள் பணிகளை பிசியாக செய்து வருகிறார். அந்த வேலையில் மக்கள் பணி மட்டுல்லாமல் இடை இடையே தான் ஒரு அம்மா என்பதையும் நிரூபித்து வருகிறார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

top videos

    சட்டப்பேரவை வளாகத்திலேயே தனது மகன்களுக்கு படிப்பு சொல்லி தரும் பணியையும் செய்து வருகிறார். புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் துறை சம்பந்தமான கோப்புகளுக்கு கையெழுத்து இடும் அமைச்சர் சந்திரபிரியங்கா இடை இடையே தனது மகன்களுக்கு வகுப்பு பாடங்களையும் கற்று கொடுத்து வருகிறார்.

    First published:

    Tags: Puducherry