முகப்பு /புதுச்சேரி /

புதுவை ஏறையூர் கிராமத்தில் பல்வேறு ஆலயங்களில் கும்பாபிஷேக விழா..!

புதுவை ஏறையூர் கிராமத்தில் பல்வேறு ஆலயங்களில் கும்பாபிஷேக விழா..!

X
புதுச்சேரியில்

புதுச்சேரியில் கும்பாபிஷேகம்

Pondicherry Temple News | புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான வானூர் வட்டம் ஏரியூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry | Puducherry (Pondicherry)

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான வானூர் வட்டம், ஏறையூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஆறுமுகசாமி, ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள், ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ கெங்கையம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ கோதண்டராம சுவாமி ஆகிய ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக கடந்த புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்ட யாகசாலையானது ஒவ்வொரு நாளும் பல்வேறு யாகங்களான விக்னேஸ்வர பூஜை, மகாலட்சுமி ஹோமம், தன பூஜை, இதனை தொடர்ந்து முதல் காலை பூஜையும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் கால பூஜை, விசேஷ பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான நாடி சந்தனம், தத்துவார்ச்சனை, திருக்கண்ட கல்பனம், பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு, அதனைத் தொடர்ந்து பரிவார தெய்வங்கள் ஆலய குடமுழுக்கு ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய கும்பாபிஷேகம், ஸ்ரீ லட்சுமி நாராயணா பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் கும்பாபிஷேக விழாவானது மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் எறையூர் பஞ்சாயத்து தலைவர் சாவித்திரி லோகநாதன், பக்தர்கள், ஊர் பெரியோர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிராமவாசிகள் மற்றும் குலதெய்வ உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

First published:

Tags: Festival, Local News, Puducherry