முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் பாதாள சாக்கடை பணி தீவிரம்.. இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை!

புதுச்சேரியில் பாதாள சாக்கடை பணி தீவிரம்.. இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை!

X
புதுச்சேரியில்

புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

Puducherry | வம்பா கீரப்பாளையம் லைட் ஹவுஸில் இருந்து குருசுகுப்பம் வரை பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி வம்பாகீரப்ப்பாளையம் லைட்ஹவுஸ் அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. கலங்கரை விளக்கத்திலிருந்து குருசுகுப்பம் வரை பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள வீட்டு கழிவுநீர்கள் அனைத்தும் குருசுகுப்பம் செல்லும். அங்கு அதிகப்படியான கழிவுநீர்கள் நிரம்பி அங்கிருந்து உபரி கழிவுநீர்கள் சுத்திகரிக்கப்பட்டு புதுச்சேரி தாவரவியல் பூங்கா, பாரதிபூங்காவில் உள்ள செடிகளுக்கு பயன்படுத்தப்படும்.

இந்த பணிகள் தற்போது திப்புராயப்பேட்டையில் இருந்து தூய்மா வீதி வரை நடைபெற்று வருகிறது இப்பணிகள் நடைபெறுவதால் துய்மா வீதியில்வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டு இப்பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்ற வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Puducherry