முகப்பு /புதுச்சேரி /

சாலை விபத்துகளை தடுக்க புதுச்சேரி போக்குவரத்து போலீசார் துரித நடவடிக்கை 

சாலை விபத்துகளை தடுக்க புதுச்சேரி போக்குவரத்து போலீசார் துரித நடவடிக்கை 

X
சாலை

சாலை விபத்துகளை தடுக்க புதுச்சேரி போக்குவரத்து போலீசார் துரித நடவடிக்கை 

Puducherry News : புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் பகுதியில் முக்கிய வளைவுகள் உள்ள 2 இடத்தில் குவி லென்ஸ் கொண்ட 2 பெரிய கண்ணாடிகளை போக்குவரத்து போலீசார் இன்று அமைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம் வழியாக செல்லும் மடுகரை சாலை குண்டும் குழியுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும், அபிஷேகப்பாக்கம் பகுதிகளில் வளைவுகள் அதிகமாக இருப்பதாலும், விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்துக்கு காரணம் வளைவில் திரும்பும்போது ஏற்பட்ட விபத்தினால் நடந்ததாக தெரியவந்தது.

இதனை தடுக்க காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார் நடவடிக்கை எடுத்தார். அதன்படி முதல் கட்டமாக அபிஷேகப்பாக்கம் பகுதியில் முக்கிய வளைவுகள் உள்ள 2 இடத்தில் குவி லென்ஸ் கொண்ட 2 பெரிய கண்ணாடிகள் இன்று அமைத்துள்ளனர். இந்நிகழ்ச்சியின்போது கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர்கள் செஞ்சி வேல், ராஜசேகரன், ஏட்டு சரவணன் மற்றும் காவலர்கள் பலர் உடன் இருந்தனர். கிராமப்புறத்தில் விபத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருவதாக காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Puducherry