முகப்பு /புதுச்சேரி /

தட்டாஞ்சாவடி காளிகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம்.. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்..

தட்டாஞ்சாவடி காளிகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம்.. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்..

X
தட்டாஞ்சாவடி

தட்டாஞ்சாவடி காளிகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம்

Pondicherry Thattanchavadi | புதுச்சேரி வில்லியனூர்  தட்டாஞ்சாவடி ஸ்ரீகாளிகாம்பாள் சமேத ஸ்ரீஅகோர வீரபத்ர சுவாமி ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா விமரிசையாக  நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி வில்லியனூர் தட்டாஞ்சாவடி ஸ்ரீகாளிகாம்பாள் சமேத ஸ்ரீஅகோர வீரபத்ர சுவாமி ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இதனை ஒட்டி மகா கணபதி பூஜை உடன் தொடங்கிய யாகசாலை பூஜையில் ஆசார்யவர்ணம், பகவத் அனுக்ஞை, வாஸுதேவ புண்யாஹவாசனம் நடைபெற்றது. இதில் பெருங்குளம் ஆதீனம் மற்றும் திருவாடுதுறை ஆதீனம் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த கும்பாபிஷேக விழாவில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் மற்றும் வில்லியனூர், தட்டாஞ்சாவடி சுற்றுப்புறத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர், இதனையடுத்து வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Puducherry