முகப்பு /புதுச்சேரி /

கொத்து கொத்தாக செத்து மடிந்த வாத்துக்கள்... கதறி துடித்த பெண்! புதுச்சேரியில் அதிர்ச்சி!

கொத்து கொத்தாக செத்து மடிந்த வாத்துக்கள்... கதறி துடித்த பெண்! புதுச்சேரியில் அதிர்ச்சி!

X
கொத்து

கொத்து கொத்தாக செத்து மடிந்த வாத்துக்கள்

puducherry ducks death | பாகூர் அடுத்த செலியமேடு பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மேய்ந்த 400க்கும் மேற்பட்ட வாத்துகள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry

புதுச்சேரி எல்லைப்பகுதியில் உள்ள மேல்அழிஞ்சிபட்டு கிராமத்தில் மீனா என்கிற பெண் 1000 க்கும் மேற்பட்ட வாத்துகளை வளர்த்து வருகின்றார். இந்த வாத்துக்களை கொண்டு தான் இவர் தனது குடும்பத்தை கவனித்து வருகின்றார்.

இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை தனது வாத்துக்களை ஓட்டிக்கொண்டு பாகூர் அடுத்த செலியமேடு பகுதியில் உள்ள வயல்வெளிகளில் வாத்துக்களை மேய்ப்பதற்கு சென்றுள்ளார். வாத்துகள் ஒரு மணி நேரம் மேய்ந்தபின்பு, அங்கு மேய்ந்த வாத்துக்கள் மயங்கி விழுந்து உயிரிழக்க தொடங்கியது. சுமார் 400 வாத்துக்கள் மயங்கி வயல்வெளியிலே விழுந்து பலியாகி உள்ளது. இதனை பார்த்த மீனா அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள், இதுகுறித்து பாகூர் காவல்நிலையத்திற்கு புகார் அளித்தனர்.

இறந்த வாத்துகள் தற்போது கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வயல் வெளிகளில் வைக்கப்பட்டிருந்த மருந்து சாப்பிட்ட இறந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒரே நேரத்தில் 400 க்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறந்தால் பாதிக்கப்பட்ட பெண் மிகவும் வருத்தத்தில் உள்ளார். மேலும் பல வாத்துகள் இறந்தால் தனது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்த அவர் இதுகுறித்து அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வாத்துகள் இறப்பிற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

First published:

Tags: Death, Local News, Puducherry