முகப்பு /செய்தி /புதுச்சேரி / புதுச்சேரியில் காலாவதியான 22 அரசுப்பேருந்துகள் இன்று முதல் நிறுத்தம்..

புதுச்சேரியில் காலாவதியான 22 அரசுப்பேருந்துகள் இன்று முதல் நிறுத்தம்..

புதுச்சேரி அரசு பேருந்து

புதுச்சேரி அரசு பேருந்து

PRTC | நஷ்டத்தில் தள்ளப்படும் பிஆர்டிசி நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாய் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் 22 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அரசு சாலை  போக்குவரத்து கழகமான பிஆர்டிசி யில் 130 பேருந்துகள் உள்ளன. அதில் 40க்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது. 15 ஆண்டுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள அரசு வாகனங்களை அழிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில் பிஆர்டிசி யில் தற்போது இயக்கப்படும் 40 பேருந்துகளில் பழைய மாடல்கள் உள்ள 22 பேருந்துகளில் சேவையை நிறுத்தப்படவுள்ளது.

புதுச்சேரியில் இருந்து குமுளி செல்லும் 2 பேருந்துகள், திருப்பதி செல்லும் 3 பேருந்துகள், ஓசூர் மற்றும் காரைக்கால், கோயம்புத்தூர் செல்லும் இரண்டு பேருந்துகள், புதுச்சேரியில் இருந்து காரைக்கால் மற்றும் நாகர்கோவில் செல்லும் பேருந்துகள், ஏனாமில் மூன்று டவுன் பேருந்துகள் என 22 பேருந்துகள் ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படாது. ஏற்கனவே நஷ்டத்தில் தள்ளப்படும் பிஆர்டிசி நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாய் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை.தற்போது மேலும் 22 பேருந்துகள் இயக்க முடியாததால் மேலும் சரிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீன்பிடி தடை காலம்.. மாத்தி யோசித்து பலனடையும் புதுவை மீனவர்கள்!

புதுச்சேரியில் மின்துறை,துறைமுகத்தை தொடர்ந்து சாலை போக்குவரத்தையும் தனியாருக்கு விட அரசு முயற்சிப்பதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. ஏற்கனவே சாலை போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் அரசு விரைந்து புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும் என திமுக தொழிற்சங்க நிர்வாகி கோபால் வலியுறுத்தியுள்ளார்.

top videos
    First published:

    Tags: Puducherry