முகப்பு /செய்தி /புதுச்சேரி / புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்.. சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்..!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்.. சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்..!

புதுச்சேரி

புதுச்சேரி

Puducherry assembly | புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அம்மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, சட்டப்பேரவையில்  ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 9ம்தேதி  தொடங்கிய சட்டமன்ற பட்ஜெட்  கூட்டத் தொடர்  இன்றுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று  தனி நபர்  தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரும்  தனிநபர் தீர்மானத்தை திமுக உட்பட 5 சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்தனர்.

தீர்மானத்தின் மீது பேசி  எதிர்கட்சி தலைவர் சிவா, “மாநில அந்துஸ்து கிடைத்தால் மட்டுமே அரசு முழுமை பெறும். மாநில அந்துஸ்து கிடைத்தால் சுதந்திரம் கிடைத்தது போல் இருக்கும். அனைத்து உறுப்பினர்களையும் டெல்லிக்கு அழைத்து சென்று வலியுறுத்த வேண்டும். தனி நபர் தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தினார்.

இத்தீர்மானத்திற்கு பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரித்தனர். முடிவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், நாம் அதிகாரம் பெறுவதை அதிகாரிகள் விரும்பவில்லை. ஏற்கனவே போட்ட தீர்மானங்களை அதிகாரிகள் மத்திய அரசுக்கு கொண்டு செல்லவில்லை. அந்த நிலை இம்முறை நடக்காது என்றார்.

இதனையடுத்து பேசிய முதல்வர் ரங்கசாமி இதனை அரசு தீர்மானமாக கொண்டு வருவதாக அறிவித்தார். அப்போது பேசிய அவர்,  “ஒட்டுமொத்தமாக மாநில அந்தஸ்து கோரி வலியுறுத்தி விளக்கமாக பேசியுள்ளனர். அதையும் தாண்டி சொல்லியுள்ளனர். நிர்வாக சிரமம் இங்கிருந்தால் தெரியும். ஆளும் போதுதான் தெரியும். உரிமையும் நிலை வேண்டும். மாநில அந்தஸ்து மட்டுமே ஒரே வழி. பலமுறை சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளோம். வலியுறுத்தி சொல்லும் போது மத்திய அரசானது பார்ப்போம் என்றனர். இந்த சட்டப்பேரவையில் ஒரு மனதாக இவ்வளவு தெளிவாக பேசி பார்த்ததில்லை. அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் பேசினர்.

அவ்வளவு வலி. அரசு தீர்மானமாக மத்திய அரசுக்கு கொண்டு சென்று பெறுவோம். நல்ல நேரம் கூடி வந்துள்ளது.  மத்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது.  நல்லது நடக்கும்.  வெற்றியை பெறுவோம். எம்எல்ஏக்கள் அனைவரையும் அழைத்து சென்று பிரதமர், உள்துறை அமைசரை சந்தித்து பேசி இந்த ஆண்டுக்குள் மாநில அந்தஸ்தை பெறுவோம்” என்றார்.

இதனை அனைவரும் எழுந்து நின்று மேஜையை தட்டி வரவேற்றனர். ஏற்கனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 13 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று 14வது முறையாக  அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

First published:

Tags: Assembly, Puducherry