முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி திருக்காஞ்சியில் விமர்சையாக நடைபெற்ற மாசி மக தேர் விழா!..

புதுச்சேரி திருக்காஞ்சியில் விமர்சையாக நடைபெற்ற மாசி மக தேர் விழா!..

X
தேர்

தேர் திருவிழா

Puducherry News | புதுச்சேரி திருக்காஞ்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி மீனாட்சி உடனுறை ஸ்ரீ கெங்கவராக நதீஸ்வரர் ஆலயத்தின் மாசிமக திருவிழாவையொட்டி தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி திருக்காஞ்சியில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ கெங்கவராக நதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாசி மக திருவிழா நடைபெற்று வருகிறது. 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவில் கெங்கவராக நதீஸ்வரருக்கு பல்வேறு வாகன சேவை தினந்தோறும் நடைபெற்று வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன் ஒரு பகுதியாக, மாசி மக உற்சவத்தில் முக்கிய விழாவான திருதேரோட்ட விழா நடைபெற்றது. அப்போது கெங்கவராக நதீஸ்வரர் மீனாட்சி காமாட்சி உடன் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டு திருவீதி உலா எடுத்துவரப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

First published:

Tags: Local News, Puducherry