முகப்பு /புதுச்சேரி /

சிட்டுக்குருவிகளை காப்பாற்ற பொதுமக்களுக்கு கூண்டுகள் வழங்கும் சமூக ஆர்வலர்...

சிட்டுக்குருவிகளை காப்பாற்ற பொதுமக்களுக்கு கூண்டுகள் வழங்கும் சமூக ஆர்வலர்...

X
சிட்டுக்குருவிகளை

சிட்டுக்குருவிகளை காப்பாற்றும் சமூக ஆர்வலர்

Puducherry News| உலக சிட்டுக்குருவி நாளை முன்னிட்டு புதுவையில் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற சமூக ஆர்வலர் பொதுமக்களுக்கு இலவசமாக சிட்டுக்குருவி கூண்டுகள் வழங்கினார்.

  • Last Updated :
  • Puducherry, India

சிட்டுக்குருவிகளை காப்பாற்ற பொதுமக்களுக்கு இலவசமாக கூண்டுகளை வழங்கி வருகிறார் சமூக ஆர்வலாளரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

முன்பெல்லாம் கிராமங்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சேவலுக்கு அடுத்து சிட்டுக்குருவிகளின் கீச் கீச் சத்தமே அலாரமாக ஒலித்தன. கழுவி வைக்கப்பட்ட சாமான்களில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகன கண்ணாடியில் தெரியும் அவற்றின் பிம்பத்தையும் கொத்திக் கொத்தி விளையாடும் அந்த சிட்டுக்குருவிகளின் அழகே தனி தான்.

கிராமத்து வீடுகளில் சிட்டுக்குருவிகள் உண்பதற்காக தானியங்களை வாசலில் கட்டுவது வழக்கம். சிட்டுக்குருவிகள் பொதுவாக வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்தன. இப்போது கான்கிரீட் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாகி விட்டதால் கூடுகட்டி குஞ்சு பொரிக்க போதிய இடவசதி அவற்றிற்கு இல்லை.

மேலும் சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் கம்பு, கேழ்வரகு, திணை, சாமை போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டது. மனிதனுடன் ஒத்து வாழும் உயிரினமாகவே சிட்டு குருவி இருக்கிறது. ஆனால் தற்பொழுதைய சூழலில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

உலகெங்கிலும் திடீரென கடந்த 15 ஆண்டுகளில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சிட்டுக்குருவிகள் இனம் அழிவை சந்தித்து வருவதால் 2010 ஆம் ஆண்டிலிருந்து சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற மார்ச் 20 ஆம் உலக சிட்டுக்குருவிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த சிட்டுக்குருவி இனங்களை மீட்டெடுக்க புதுச்சேரியில் சமூக ஆர்வலர்கள் சிட்டுக்குருவி தங்குவதற்கு கூடுகளை தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். புதுச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் அருண் இதற்காக தன்னார்வலர்களை கொண்ட அமைப்பை உருவாக்கி சிட்டுக்குருவிகள் தங்கவும், முட்டையிட்டு குஞ்சு பொரிக்கவும் வசதியாக கூடுகளை செய்து தருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக கூடுகளை செய்து விரும்பும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

மேலும் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களில் சிட்டுக்குருவிக்கு கூடுகள் அமைத்து அதற்கு தினமும் குடிநீர் உணவு ஆகியவற்றை கொடுத்து பராமரித்து வருவதால் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார். இந்த நிலையில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு விதவிதமான கூடுகளை தயாரித்து புதுச்சேரி கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

top videos

    சிட்டுக்குருவிகள் நம்முடன் வாழும் ஒரு அற்புத படைப்பு அவற்றை பெருக்க இயற்கை முறையில் விவசாயம் செய்வது சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பறவையியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூழ்நிலை உருவாக்கி இந்த உலகம் மனிதர்கள் வாழ மட்டும் அல்ல அனைத்து உயிரினங்களுக்கும் ஆனது என்பதை உரக்க சொல்ல வேண்டும்.

    First published:

    Tags: Local News, Puducherry