முகப்பு /புதுச்சேரி /

வீட்டில் இருந்த எலியை விழுங்கிய நல்ல பாம்பு.. புதுச்சேரியில் அதிர்ச்சி!

வீட்டில் இருந்த எலியை விழுங்கிய நல்ல பாம்பு.. புதுச்சேரியில் அதிர்ச்சி!

X
எலியை

எலியை விழுங்கிய பாம்பு

Puducherry | வீட்டில் இருந்து மீட்கப்பட்ட நல்ல பாம்பு முழு எலியை விழுங்கி கக்கிய வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த பூசாரி பாளையத்தை சேர்ந்தவர் ஞானசேகர், இன்று காலை வெளியில் சென்று வீட்டுக்கு திரும்பிய அவர் வீட்டில் சத்தம் கேட்கவே உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது சுமார் 5 அடி நீளம் உள்ள ஒரு நல்ல பாம்பு மயக்கத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை அடுத்து ஞானசேகர்பாம்புபிடிக்கும் நபரான பாகூரைச் சேர்ந்த விக்கி மணிக்கு பேசி மூலம் தகவல் கொடுத்தார்.

தகவலை அறிந்த உடன் ஞானசேகர் வீட்டுக்கு விரைந்து வந்த விக்கி மணி வீட்டிலிருந்த மயக்க நிலையில் கிடந்த சுமார் ஐந்து அடி நீலம் கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார். பாம்பு பிடித்தவுடன் அது விழுங்கி இருந்த இறையை தரையில் கக்கியது அப்போது ஒரு பெரிய எலி விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பாம்பை ஒரு டப்பாவில் பிடித்து சென்றார்.

அதன்பிறகு வீட்டில் இருந்தவர்கள் பெருமூச்சியை விட்டனர்.

மேலும் நல்ல பாம்பு எலியை விழுங்கிய செய்தி ஊர் முழுவதும் பரவ, அப்பகுதி மக்கள் ஆர்வமாக சென்று பாம்பை பார்த்து சென்றனர்.

First published:

Tags: Local News, Puducherry, Snake