முகப்பு /புதுச்சேரி /

புதுவை சித்தானந்தா கோயிலில் நடராஜருக்கு நாட்டியாஞ்சலி!

புதுவை சித்தானந்தா கோயிலில் நடராஜருக்கு நாட்டியாஞ்சலி!

X
நாட்டியாஞ்சலி

நாட்டியாஞ்சலி

Puducherry News : மஹா சிவராத்திரி விழாவையொட்டி புதுச்சேரி சித்தானந்தா கோயிலில் தொடங்கிய நாட்டியாஞ்சலி விழாவில் வெளிநாடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த கலைஞர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தானந்த சுவாமி தேவஸ்தானத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் இன்று முதல் (18ம் தேதி) வரும் 21ம் தேதி வரை நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது. இதில் மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகள், பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த நாட்டியக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், அவர்கள் பரதம், குச்சிப்புடி, கதக் உள்ளிட்ட பல்வேறு நனங்களை ஆடி தாங்கள் கற்ற கலையை சிவபெருமானுக்கு நாட்டியக்கலை மூலம் சமர்ப்பணம் செய்கின்றனர். நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் புதுச்சேரி, சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த கலைஞர்கள் தங்களின் நாட்டிய திறமைகளை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

First published:

Tags: Local News, Maha Shivaratri, Puducherry