முகப்பு /புதுச்சேரி /

உலக நன்மைவேண்டி 100க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் யாத்திரை! மேள தாளங்களுடன் ஊர்வலம்!

உலக நன்மைவேண்டி 100க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் யாத்திரை! மேள தாளங்களுடன் ஊர்வலம்!

X
சிவனடியார்கள்

சிவனடியார்கள் யாத்திரை

உலக நன்மைவேண்டி புதுச்சேரியில் நடைபெற்ற பாதயாத்திரையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு நடனமாடியபடியும், சிவன் பாடல்களை பாடிய படியும் ஊர்வலம் சென்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry

புதுச்சேரியில் உலக நன்மை வேண்டி சிவனடியார்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.

உலக மக்கள் இனப்பற்றுடன் வாழவேண்டி புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார்கள் பக்தர்கள் திருக்கூட்டம் சார்பில் இரண்டாம் ஆண்டு சிவசிந்தனை நடை பயணம் நடைபெற்றது.

இந்த நடைபயணம் காந்தி விதி, வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து தொடங்கி வில்லியனூர் திருக்காமேஸ்வரர் திருக்கோயில் வரை நடைபெற்றது. சிவ சிந்தனை நடை பயணத்தில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் கலந்து கொண்டு பாதயாத்திரை சென்ற சிவ பக்தர்களை வாழ்த்தி சிறப்பித்தார்.

யாத்திரையில் கலந்து கொண்ட சிவனடியார்கள் சிவன் பாடலை பாடிக் கொண்டு நடனம் ஆடிக்கொண்டு சென்றது பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது. மேலும் வில்லியனூர் சற்குரு ஸ்ரீ ராம் பரதேசி சுவாமிகள் சேவா டிரஸ்ட் சார்பில் நடைபயணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுபமங்கலம பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார்கள் பக்தர்கள் திருக்கூட்டம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது..

First published:

Tags: Local News, Puducherry