முகப்பு /புதுச்சேரி /

பயனற்ற பொருட்களில் இருந்து பயன்படக்கூடிய பொருட்கள் உருவாக்கம்.. புதுச்சேரி மாணவர்கள் அசத்தல்!

பயனற்ற பொருட்களில் இருந்து பயன்படக்கூடிய பொருட்கள் உருவாக்கம்.. புதுச்சேரி மாணவர்கள் அசத்தல்!

X
புதுச்சேரி

புதுச்சேரி

Puducherry News | பயனற்ற பொருட்களில் இருந்து சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய பொருட்களை புதுச்சேரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் உருவாக்கினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி பாகூர்கொம்யூன் மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு வழிகாட்டுதலின்படி, பயனற்ற பொருட்களில் இருந்து சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய பொருட்களை மாணவ மாணவியர்கள் உருவாக்கி அதனை காட்சிப்படுத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமை தாங்கி அனைத்து படைப்புகளையும் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டி பேசினார்.

இதனைத்தொடர்ந்து பிள்ளையார்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ரேவதி, பாரதி ஆகியோர் நடுவராக இருந்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு அதில் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினர். சுமார் 65 படைப்புகளை மாணவர்கள் கண்காட்சியில் வைத்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தென்னரசு, ஜெயசுந்தர். சுமதிராகவன், சாந்தி, பாவாடை சாமி, பாலி, விஜய், சதீஷ் வெங்கடேசன் சரிதா, செல்வ பிரியா ஆகியோர் முன்னின்று ஏற்பாடு செய்தனர். இதில் ஆசிரியர் சசிகுமார் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, வழி நடத்தி நன்றி உரையாற்றினார்.

First published:

Tags: Local News, Puducherry