முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி சக்தி மாரியம்மன் கோயிலில் 7ஆம் ஆண்டு தேரோட்டம் விமரிசை!

புதுச்சேரி சக்தி மாரியம்மன் கோயிலில் 7ஆம் ஆண்டு தேரோட்டம் விமரிசை!

X
புதுச்சேரி

புதுச்சேரி தேர் திருவிழா

Puducherry car festival | புதுச்சேரி சக்தி மாரியம்மன் கோயிலில் ந்டைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த நெய்குப்பி கிராமத்தில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோயிலில் 7ம் ஆண்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியில் நெய்குப்பி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை அடுத்து ஏழாம் ஆண்டு திருத்தேரோட்ட நிகழ்ச்சியானது பால்குட ஊர்வலத்துடன் துவங்கியது.

இதனை தொடர்ந்து மாலை பொழுதில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தேர் நகரின் முக்கிய வீதியில் வழியாக சென்று தேர் முற்றத்தை அடைந்தது. தொடர்ந்து இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Car Festival, Local News, Puducherry