விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜமால். இவர் மீது புதுச்சேரி, கோட்டக்குப்பம் காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் செயல்படும் கடைகளில் ரவுடி ஜமால் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிப்படைந்த வணிகர்கள் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புதுச்சேரி ரவுடியான ஜமால் மீது புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜமாலை சரணடைய கூறிய நிலையில் இன்று ஜமால் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்நிலையில், சரணடைவதற்கு முன்பு தான் பிரபலமடைய வேண்டும் என்பதால் தனது ஆதரவாளர் ஒருவரை வைத்து சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட கூறியுள்ளார்.
அதன் படி ஜமால் சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு ஜெயிலுக்கு போவதை சுட்டிக்காட்டி “நானும் ஜெயிலுக்கு போறேன் நானும் ஜெயிலுக்கு போறேன் நானும்ரவுடி தான்“ என்று கூறியிருப்பார். அதேபோல் இன்று ரவுடி சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Puducherry