முகப்பு /புதுச்சேரி /

மேளதாள இசை முழங்க தமிழ் மொழி குறித்து விழிப்புணர்வு பேரணி..!

மேளதாள இசை முழங்க தமிழ் மொழி குறித்து விழிப்புணர்வு பேரணி..!

X
ஒளவையார்

ஒளவையார் திருவள்ளுவர் வேடமணிந்து தமிழ் மொழி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு

Puducherry | உலகத் தாய்மொழி தினத்தை ஒட்டி புதுவையில் தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் சார்பில் மொழியுணர்வு பேரணி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

உலகத் தாய்மொழி தினத்தை ஒட்டி புதுச்சேரியில் ராதே அறக்கட்டளை, தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் சார்பில் நடத்திய மொழியுணர்வு பேரணியை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார். புதுச்சேரி காமராஜர் சிலை அருகில் இருந்து தொடங்கிய இந்த பேரணியில் பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பொன்.சண்முகம் தலைமையில் 20 தவில், 20 நாதஸ்வர கலைஞர்கள் மேளதாள இசை முழங்கினர். தமிழ்த்தாய், ஓளவையார், திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர் வேடமணிந்து அணிவகுத்து நாடகக் கலைஞர்கள் வந்தனர்.

மேலும் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற இங்கே கிளிக் செய்யவும்

கவுண்டம்பாளையம் முத்துரத்தினம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி வந்தனர். தமிழ் முழக்கங்கள் கொண்ட துண்டறிக்கை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. பேரணியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி கடற்கரை சாலை காந்தி சிலையில் நிறைவடைந்தது.

First published:

Tags: Puducherry, Rally, Tamil language