முகப்பு /புதுச்சேரி /

இனி திருப்பதி போக வேண்டாம்.. புதுச்சேரியிலேயே பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்!

இனி திருப்பதி போக வேண்டாம்.. புதுச்சேரியிலேயே பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்!

X
புதுச்சேரி

புதுச்சேரி பெருமாள்

Puducherry News | புதுச்சேரி அருகே உள்ள பஞ்சவடி ஆலயத்தில் திருமலை திருப்பதியில் நடப்பது போன்றே சுப்ரபாதம், 14 வகை சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் பஞ்சவடியில் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கே"மத்திய திருப்பதி" என அழைக்கப்படும் ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இங்கே, பிரதி வாரம் வியாழக்கிழமைநேத்ர தரிசன சேவையும், வெள்ளிக்கிழமை அன்று விசேஷ திருமஞ்சன சேவையும், சனிக்கிழமை அன்று சுப்ரபாதம் மற்றும் அர்ச்சனை சேவைகளும், விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி சோப கிருது தமிழ் புத்தாண்டையொட்டி, திருமலை திருப்பதியில் நடப்பது போன்றே சுப்ரபாதம், 14 வகையான சிறப்பு திருமஞ்சனம், தோமாலை சேவைகள் மற்றும் அர்ச்சனை நடைபெற்றது.

First published:

Tags: Local News, Puducherry, Tirumala Tirupati, Tirupathi