புதுச்சேரி குருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 71 வயதான ரங்கநாதன் பொதுப்பணித்துறை ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயலட்சுமி இருவருக்கும் குமரகுரு என்ற மகனும் சசிகலா என்ற மகளும் உள்ளனர்.
இதில் குமரகுரு காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியேறி தனி குடும்பம் நடத்தி வருகின்றனர். வயதான கணவன்- மனைவி இருவருக்கும் இருதய நோய் இருந்ததன் காரணத்தினால் குருவடிக்குப்பத்தில் உள்ள தங்களது 1200 சதுர அடி வீட்டை மகன் பெயரில் மூன்று ஆண்டுகளுக்கு உயில் எழுதியுள்ளனர்.
உடல்நிலை சரியானவுடன் ரங்கநாதன் சொத்தை தனது பெயருக்கு மீண்டும் மாற்றி எழுத மகனிடம் கூறியுள்ளார். அப்போது அவரது மகன் குமரகுரு மாற்றி விட்டதாக தெரிவித்தார். வெகு நாள் கழித்து சந்தேகம் அடைந்த ரங்கநாதன் அந்த வீட்டிற்கான வில்லங்கம் எடுத்துப் பார்க்கும் பொழுது தன்னுடைய பெயரில் இருக்க வேண்டிய வீடு மகன் பெயருக்கு மாறி இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து மகனிடம் கேட்டபோது ”நான் அப்படித்தான் செய்வேன் இனிமேல் உங்களுக்கு சோறு தண்ணி கிடையாது வீட்டை நீங்கள் காலி செய்துவிடலாம்” என்று கூறி மிரட்டியதாக ரங்கநாதன் தெரிவித்தார். மகன் ஏமாற்றியதை அறிந்த வயதான தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் மணிகண்டனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தங்களது சொத்தை மீட்டு தர வேண்டும் என்று ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தார். புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து சொத்துக்களை மீட்டுத் தருவதாக உறுதி அளித்தார்.
தாய் தந்தைக்கு வயதான காலத்தில் சோறு போட வேண்டிய மகனே சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு சோறு தண்ணி போடாமல் வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Parents, Puducherry