முகப்பு /புதுச்சேரி /

அண்ணன் ஆனைமுகன் பைக் ஓட்ட தம்பி முருகன் பின்னால் அமர விமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர சடல் உற்சவம்...

அண்ணன் ஆனைமுகன் பைக் ஓட்ட தம்பி முருகன் பின்னால் அமர விமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர சடல் உற்சவம்...

X
காலாப்பட்டியில்

காலாப்பட்டியில் பறவை காவடி எடுத்த பக்தர்கள்

Pondicherry News| புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அலகு குத்தி ஆகாயத்தில் தொங்கிய படியே பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் செடல் திருவிழா மற்றும் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நடைபெற்ற 51 ஆம் ஆண்டு செடல் திருவிழாவில் பாலமுருகனுக்கு 9 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து பாலமுருகன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முருகனுக்கு பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி ஆகியவற்றை எடுத்தும் அலகு குத்தி லாரி, கார், உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் இளநீர், பனை, மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பழங்களினால் அலங்கரிக்கப்பட்ட ஜே.சி.பி, கிரேன் போன்ற வாகனங்களில் அலகு குத்தி ஆகாயத்தில் தொங்கிய படியே பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த திருவிழாவில் காலப்பட்டு மட்டுமின்றி புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

top videos

    பக்தர்கள் பக்தி பரவசத்தில் எழுப்பிய அரோகரா கோஷங்கள் விண்ணை பிளந்தது.

    First published:

    Tags: Local News, Puducherry