முகப்பு /புதுச்சேரி /

களையிழந்த முள்ளோடை நுழைவு வாயில்.. சீரமைக்க புதுச்சேரி மக்கள் கோரிக்கை..  

களையிழந்த முள்ளோடை நுழைவு வாயில்.. சீரமைக்க புதுச்சேரி மக்கள் கோரிக்கை..  

X
களையிழந்த

களையிழந்த முள்ளோடை நுழைவு வாயில்

Puducherry News | புதுச்சேரி எல்லையான முள்ளோடை பகுதியில் அமைந்துள்ள புதுச்சேரி நுழைவு வாயில் மிகவும் மோசமான நிலையில் புதர் மண்டி கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி எல்லையான முள்ளோடையில் உள்ளது புதுச்சேரி நுழைவு வாயில். கடந்த காலங்களில் இந்த நுழைவு வாயில் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளையும், வெளிமாநில மக்களையும் கவர்ந்து இழுத்து வரவேற்கும் வண்ணம் நுழைவு வாயில் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது புதுச்சேரியின் இந்த நுழைவு வாயில் மிக மோசமான நிலையில் புதர்மண்டி உள்ளது.

மேலும், நுழைவு வாயிலின் சுவர்களில் வர்ணம் தீட்டும் பணிகள் மற்றும் பராமரிப்பு செய்யப்படாமல் இருப்பதால் இந்த இடம் களையிழந்து காணப்படுகிறது. மேலும் இதன் அருகில் உள்ள கோபுர விளக்குகள் பழுதாகி பல நாட்கள் ஆகியும் சரி செய்யப்படாத நிலையில் உள்ளது. மேலும் சாலை நடுவில் உள்ள கட்டைகளில் கருப்பு வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். இந்த இடத்தினை ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி கிராம மக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

First published:

Tags: Local News, Puducherry