முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி ஸ்ரீவன்னிய பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவ விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்!

புதுச்சேரி ஸ்ரீவன்னிய பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவ விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்!

X
வன்னிய

வன்னிய பெருமாள் கோயில்

சித்திரை பிரமோத்ஸவ விழாவையொட்டி தினந்தோறும் வாகன சேவையும், 16ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வன்னிய பெருமாள் கோவிலின் சித்திரை பிரம்மோத்ஸவ விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ வன்னிய பெருமாள் திருக்கோவில். இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அலர்மேல்மங்கை ஸமேத ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாளின் சித்திரை பிரமோத்ஸவ விழா தொடங்கியது. அதன்படி, காலை ஸ்ரீ அலர்மேல்மங்கை ஸமேத ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

புதுச்சேரி ஸ்ரீ வன்னிய பெருமாள் கோவிலில் சித்திரை பிரமோத்ஸவ விழா கொடியேற்றம்!

தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கருட கொடியானது வேத மந்திரங்கள் ஓத பட்டாச்சார்யார்களால் ஏற்றப்பட்டது. கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான  பக்தர்கள் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ அலர்மேல்மங்கை ஸமேத ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் உட்புறபாடு நடைபெற்றது.

முன்னதாக சித்திரை பிரமோத்ஸவ விழாவையொட்டி தினந்தோறும் வாகன சேவையும், 16ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Puducherry