முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி அன்னையின் 145-வது பிறந்தநாள்- சமாதியில் வழிபட குவிந்த மக்கள்

புதுச்சேரி அன்னையின் 145-வது பிறந்தநாள்- சமாதியில் வழிபட குவிந்த மக்கள்

X
அன்னை

அன்னை

Puducherry Mother birthday | புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெற்ற அன்னையின் 145 பிறந்த நாள் விழாவில் நாடு முழுவதிலிருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள் கூட்டு தியானம் மற்றும் தரிசனத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியை அடுத்து ஆரோவில் என்ற சர்வதேச நகரை அமைத்த அன்னை, பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 1878-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி பிறந்தார். அன்னையின் இயற்பெயர் மிர்ரா அன்போன்ஸா ஆகும். சிறிய வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய அன்னை, அரவிந்தரின் ஆன்மீக கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1914-ல் புதுச்சேரி வந்தார்.

அன்னையின் பெரும் முயற்சியால் தான் புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமும், ஆரோவில் சர்வதேச நகரமும் தோற்றுவிக்கப்பட்டன.

அன்னையின் பிறந்த நாளையொட்டி, காலை முதல் அரவிந்தர் ஆசிரமத்தில், அன்னை வசித்த அறை பக்தர்களின் தரிசனத்திற்கு திறக்கப்பட்டது.

அன்னை ஆசிரமம்

மேலும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னை சமாதியை பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பின்னர் கூட்டு தியானமும் மேற்கொண்டனர். இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்தன.

First published:

Tags: Local News, Puducherry